Friday, August 30, 2013


பசுமை நினைவுகள் 

வாழ்க்கைப் புத்தகத்தில் 
பசுமையான பக்கங்களாய் 
அழியாத சுவடுகளாய் 
என் பள்ளி நினைவுகள்.....
வெள்ளைச் செட்டைக்குள் 
பட்டாம் பூச்சிகளாய்  
சிறகடித்த காலங்கள் 
நினைக்கும்  பொழுதினில் 
சுகமான  தென்றலாய் 
மனதை வருடிச்செல்லும்..... 
கைகளில் அடங்காத 
புத்தகச் சுமைகள்.... 
சோதனை என்றவுடன் 
வேதனையை வரவழைத்து 
விழித்திருந்த இரவுகள்....
கண்கள் சொருகும்போதும் 
கொட்ட முழித்து 
கொட்டாவி விட்ட நினைவுகள் .... 
பரீட்சை முடிந்தவுடன் 
நித்திரை மகள் 
நிச்சயமாய் வராளா 
என்றெண்ணி ஏங்கி 
காத்திருந்த இரவுகள்.....
நட்பென்ற கூட்டுக்குள் 
பாசச்சிறகுகள் விரித்து 
நனைந்திருந்த குஞ்சுகளாய் 
நினைவிழந்த நாட்கள்....
கண்ணைக்கட்டி கோபம் போட்டு 
மௌனமாயிருந்தபோதும் 
கடைக்கண்ணால் தோழியை 
பார்த்திருந்த ஞாபகங்கள்....
இன்னும் எத்தனையோ 
இதய அறைகளை 
முட்ட நிரப்பிய நினைவுகளாய் 
என் பள்ளிக்காலத்து 
பசுமை நினைவுகள்......







Wednesday, May 15, 2013



அம்மா 

உதிரத்தை  பாலாக்கி ஊட்டி 
ஊணுறக்கம் மறந்து காப்பாள் 
பிரதிபலன் பாராமல் 
பிறவி தந்து ஆளாக்கினாள் 
தன் மகவு கண்வளர 
தன்னுறக்கம்  தாரைவார்ப்பாள் 
உன் கண்ணில் நீர் கண்டால் 
உசிரையே விட்டிடுவாள் 
அகரம் நீ கற்கும் வேளை
ஆசானாய் முன்னிருப்பாள்
பள்ளியில் நீ படிக்கும் போது 
புத்தகப்பை தான் சுமப்பாள் 
பரீட்சை உனக்கு என்றால் 
அலாரமாய் அவளிருப்பாள் 
கோபத்தில் நீ திட்டும் போதும் 
குழந்தை என பொறுத்திடுவாள்  
நீ யாருக்காக வாழ்ந்தாலும் 
அவள் உனக்காகவே வாழ்ந்திடுவாள் 
அன்பென்றால் என்னவென கேட்டால் 
அன்னையை காட்டுவாயா நீ....?


 
மாற்றம் 

பருவகாலத்து மாற்றங்கள் போல் உன் பார்வை தந்த
மாற்றங்கள் எத்தனை ....

பட்டாம் பூச்சியை
ரசிக்கதெரியாதவன்
வெட்டுக்கிளியைக்கண்டு
லயித்துப் போகின்றேன்.......

வருடிச்செல்லும் தென்றலைக்கூட
திரும்பியும் பார்க்காதவன் 
சூரக்காற்றுக்குள்ளும்
சுரங்கள் பிடிக்கிறேன்......

மலர்களின் வாசனையை
முகர்ந்தேயறியாதவன்
மண்புழுதி வாசனையை
நுரை ஈரலுக்குள் நிரப்புகிறேன்......

சங்கீதம் என்றாலே
சலித்துக்கொள்பவன்
சருகுகளின் சலசலப்பில்
சுருதிகளை சேமிக்கின்றேன்......

பௌர்ணமி நிலவை
மறந்தும்கூட பார்க்காதவன்
அமாவாசை இரவுகளின்
நிசப்தத்தில் மூர்சையாகிறேன்......

வானிலை மாற்றத்திற்கும்
காலநிலை மாற்றத்திற்கும்
கதிரவனே காரணமாம்
என்னுடைய மாற்றத்திற்கு
காரணம் யாரென்று
உனக்கு புரிகிறதா...?







Friday, January 18, 2013

கனவுகள்....

உன் ஏறுதலுக்கான கனவு இலக்குகள்
பனை மரங்களின் உச்சத்தில் இருக்கட்டும்
அப்போதுதான் உன் நிஜப் பயணங்களின் அடைவுகள்
வடலிகள் வரையாவது தொடரும்
உனது இயலுமைகளின் குறைமதிப்பால்
உன் கனவுகளை வடலிகளாய் வரையறுத்தால்
உனது நிஜ அடைவுகளின் இறுதியில்
தரையிலேயே நின்றுகொண்டிருப்பாய் ........

Saturday, November 19, 2011

இரவு வருவது பகலிற்காக
இடி மின்னல் வருவது மழைக்காக
பிரிவு  வருவது உறவிற்காக
இருள் வருவது ஒளிக்காக
துன்பம் வருவது இன்பத்திற்காக
புயல் வருவது அமைதிக்காக
அஸ்தமனம் வருவது உதயத்திற்காக
அழிவு வருவது ஆக்கத்திற்காக
ஆனால்.....
காதல் வருவது எதற்காக?
பள்ளங்களையா எம் மனங்கள்
சாக்கடையை தேக்கிகொள்ளும்
வள்ளங்கள் வந்து போக
கரை நின்று பார்ப்பது போல
உள்ளங்கள் பாறையாகிவிட
எண்ணங்கள் வந்து போகும்
குள்ளங்கள் நிலவிலுண்டு
எம் நெஞ்சங்களில் நிறைய உண்டு...