கனவுகள்....

உன் ஏறுதலுக்கான கனவு இலக்குகள்
பனை மரங்களின் உச்சத்தில் இருக்கட்டும்
அப்போதுதான் உன் நிஜப் பயணங்களின் அடைவுகள்
வடலிகள் வரையாவது தொடரும்
உனது இயலுமைகளின் குறைமதிப்பால்
உன் கனவுகளை வடலிகளாய் வரையறுத்தால்
உனது நிஜ அடைவுகளின் இறுதியில்
தரையிலேயே நின்றுகொண்டிருப்பாய் ........